ஒரு சிங்கம் தினமும் விழித்தவுடன் தனது இரைக்காக மானின் பின்னால்ஓடுகிறது.மான் விழித்தவுடன் சிங்கத்திடம் இருந்து தப்பிபதற்காக ஓடுகிறது .இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் சிங்கமாக இருந்தாலும் சரி ....அல்லது மானாக இருந்தாலும் சரி ..அது ஒரு விஷயமே இல்லை.
நீங்கள் ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும் ....இல்லையென்றால்? ......
Saturday, October 16, 2010
Sunday, October 10, 2010
johari window- சுய மதிப்பீட்டுக்கான வழி
ஜோஹரி விண்டோ
1950 ல் கலிபோர்னியாவில் ஜோசப் லுப்ட் மற்றும் ஹாரி இன்கம் ஆகியோர் மனித ஆளுமை பற்றி நடத்திய ஆராய்ச்சியின் விளைவே இந்த தத்துவம்.இது நமது ஆளுமையை அளவிடுதல் மட்டும் அல்லாது நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை தெளிவாக்குகிறது.
நமது ஆளுமையை A B C D நான்கு சதுரங்களாக பிரித்துகொள்வோம் .ஒரு பக்கம் நான். ஒரு பக்கம் மற்றவர்கள்.ஒவ்வொரு பக்கமும் தெரியும் ,தெரியாது என பிரிக்கப்பட்டுள்ளது.
A . arena (open ) உங்களை பற்றி உங்களுக்கும் தெரியும்.மற்றவர்களுக்கும் தெரியும்.இது உங்களின் பலம் மற்றும் பலவீனம்.முக்கியமாக நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும் குணநலன்கள் அல்லது திறந்தபுத்தகமாக இருக்கவிரும்புவது
B .blind . உங்களை பற்றி உங்களுக்கு தெரியாதது.ஆனால் மற்றவர்களுக்கு தெரிந்தது .இது உங்களின் நல்ல மற்றும் கெட்ட நடத்தைகள் (behaviour ).உதாரணமாக கோபப்படுவது ,திமிராக பேசுவது .உங்களை பற்றிய அறியாமை.முக்கியமாக மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் இதை பொறுத்தே அமையும்.
C closed .உங்களை பற்றி உங்களுக்கு தெரியும் ஆனால் மற்றவர்களுக்கு தெரியாது .இது உங்களின் ரகசியம்,ரகசிய திட்டம்,சூழ்ச்சி ..உங்கள் ஆழ் மனதுக்குள் இருப்பது.
D dark உங்களை பற்றி உங்களுக்கும் தெரியாது.மற்றவர்களுக்கும் தெரியாது..இது உங்களின் உண்மையான திறமை.(inherent potential )உணர்வுகள் ,அறிவுக்கூர்மை கட்டுபடுத்தப்பட்ட நடத்தை அல்லது உளநிலை .இந்த பகுதியை உங்களின் அனுபவத்தின் மூலமே கண்டறிய முடியும்.இதற்க்கு நீண்ட காலங்கள் ஆகலாம்.
சரி. இப்போது உங்கள் ஆளுமையை பற்றிய வரைபடத்தை வரைய துவங்குங்கள்
அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்.
A .உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை பட்டியலிடுங்கள் .மற்றவர்களுக்கு தெரியும் என்பதை உறுதி படுத்திகொள்ளுங்கள்.இந்த பரப்பின் அளவு அதிகரிக்கபடவேண்டும்.
B .உங்களை பற்றி நீங்கள் அறியாதவற்றை உறவினர்,நண்பர்கள் ,சக ஊழியர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்யுங்கள். இதில் மிக முக்கியம் எதுவென்றால் நீங்கள் feedback கேட்கும் நபர் உங்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட நபராக இருத்தல் அவசியம்.உங்கள் தவறுகளை திருத்திகொள்ளுங்கள் ..இந்த பரப்பு இருக்கவே கூடாது.முழுவதையும் குறைக்க முயற்சி செய்யவும்.
C .இது உங்கள் ரகசிய இடம்.ரகசியங்கள் காப்பாற்றப்படவேண்டும்.ரகசிய திட்டங்கள் போட்டி நிறைந்த உலகில் அவசியமான ஒன்றே.நோக்கம் நல்லவையாக இருக்கவேண்டும்.ஆனால் எல்லாமே ரகசியமானது எனில் உங்களை யாரும் நம்ப மாட்டார்கள்.இந்த மாதிரி நபர்கள் உங்கள் நட்பு வட்டாரத்திலும் இருக்கலாம்.மற்றவர்களின் உதவியை பெற நம்பிக்கை அவசியம்.
இந்த பரப்பு நிச்சயம் அவசியம். ஆனால் குறைந்தபட்சம் ஆக்குதல் முக்கியம்.
D .உங்களை பற்றி உங்களுக்கும் தெரியாமல் மற்றவர்களுக்கும் தெரியாமல் இருப்பது எந்த பிரயோஜனத்தையும் தராது.உங்கள் அனுபவத்தின் மூலமே கண்டறியமுடியும். இதற்க்கு அருமையான உதாரணமாக 7 G ரெயின்போ காலனி படத்தின் காட்சியை கூறலாம்.ரவிகிருஷ்ணா படிக்க மாட்டார்.ஊர் சுற்றுவார்.மொத்தத்தில் உருப்படாதவர்.சோனியா அகர்வால் ஒரு கம்பெனிக்கு அழைத்துசெல்வார்.நேர்காணலில் தோல்வி அடைந்தவரை கோபப்பட்டு ஆத்திரத்தில் திட்டிவிட்டு ஒரு நிமிட யோசனைக்கு பிறகு இவனுக்கு டூ வீலரை கழற்றி மாட்ட தெரியும் என்று சொல்லுவார்.
உங்களது அனுபவமும் ,நீண்ட காலம் அருகில் இருக்கும் நபர்களின் மூலமே உணரமுடியும்.இந்த பரப்பை முழுவதும் நீக்க முடியாது.முடிந்த அளவுக்கு குறைத்து பாருங்கள்.
உன்னுள் நீ
நீ ....ஒரு மகத்தான மனிதன் ....மகத்தான சக்தி ..உங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் மட்டுமல்ல. அவசரமும் கூட ...இந்த பிறவி ஒரு வாய்ப்பு.நாம் பயன்படுத்திக்கொள்ள நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை மேம்பட எத்தனையோஅறிஞர்கள்கூறியுள்ளார்கள்.... ..எழுதியுள்ளார்கள்...அதில் எனக்கு கிடைத்த விஷயங்களை எளிய நடையில் எளிய தமிழில் உங்களுக்கு வழங்குவதே எனது ஆவல்.
என்னை ஊக்கபடுத்த உங்களது மேலான ஆலோசனைகளையும் பின்னூட்டங்களையும் அதிகமாக எதிர்பார்க்கிறேன் ..
வாழ்க்கை மேம்பட எத்தனையோஅறிஞர்கள்கூறியுள்ளார்கள்.... ..எழுதியுள்ளார்கள்...அதில் எனக்கு கிடைத்த விஷயங்களை எளிய நடையில் எளிய தமிழில் உங்களுக்கு வழங்குவதே எனது ஆவல்.
என்னை ஊக்கபடுத்த உங்களது மேலான ஆலோசனைகளையும் பின்னூட்டங்களையும் அதிகமாக எதிர்பார்க்கிறேன் ..
Subscribe to:
Comments (Atom)