தேவைகளின் நிலை
இது முந்தைய பதிவின் தொடர்ச்சி....முந்தைய பதிவை படிக்காதவர்கள் வாசித்துவிட்டு வரவும்.
மஸ்லா தேவைகளே வாழ்கையை நிர்ணயிக்கின்றன.அடுத்த நிலைக்கு செல்ல உந்துதலை அளிக்கின்றன.முதல் நிலையில் மனிதன் தனது உடலுக்கு தேவையான வற்றை பூர்த்தி செய்துகொள்கிறான்.அடுத்து பாதுகாப்பு தேவையான வருமானத்தை தேடுகிறான்.இவை பூர்த்தியான பின் தான் உணர்வுகளுக்கும் ,உணர்ச்சிகளுக்கும் ஒரு பிணைப்பை தேடுகிறான்.காதல் ,திருமணம்,சொந்தம் பந்தம் இவையாவும் இந்த மூன்றாம் நிலை.
அடுத்து சமூக அந்தஸ்து தேவை ஆகிறது.பலர் தான் இருக்கும் இடத்தில் மட்டும் பாராட்டுகளை பெற்று அது போதும் என எண்ணுகிறார்கள்.சிலர் அதையும் தாண்டி நாடு கடந்து கூட புகழை பெறுகிறார்கள். நான்காவது நிலையையும் கடந்தவர்கள் சுயதேடலை துவங்குகிறார்கள்.
சுயதேடல் நிலை
இந்த நிலையை அடைந்தவர்கள் இந்த பிறவியை பூர்த்தி செய்தவர்கள் என கருதலாம்.
மஸ்லா சுயதேடலை அடைந்தவர்களின் குணங்களாக கீழ்க்கண்டவற்றை குறிப்பிடுகின்றார்.
1 .இவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் உண்மைக்கு அண்மையில் இருப்பார்கள்.
2 மற்றவர்களை மிகவும் அனுசரித்து செல்வார்கள்.மதித்து நடப்பார்கள்.
3 சிந்தனையிலும் நடத்தையிலும் தெளிவாகவும் உயர்ந்தும் இருப்பார்கள்.
4 .எந்த விஷயத்திலும் பிரச்சனையை தீர்க்கும் நோக்கம் மட்டுமே இருக்கும்.தங்களை முன்னிலைபடுத்தும் நோக்கம் இருக்காது.அவர்கள் அணுகுமுறை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.
5 ஆழ்ந்த சமூக ஈடுபாடும் ,மனிதகுலத்தின் மேல் இரக்கமும் உடையவர்கள் .
6 .நகைச்சுவை உணர்வும் ,தத்துவமும் ,பொருள் பொதிந்த பேச்சாற்றல் உடையவர்கள்.
இதையே Dr .ருத்ரன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
இவர்கள் தன்னிறைவு,தெளிவு,நிம்மதி அடைந்தவர்கள்.பிறருடைய எதிர்பார்ப்புக்காக ஒப்பனை ஏற்கவேண்டிய அவசியம் இல்லாதவர்கள்.தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளாமல் தேவைகளே எனக்கு கிடையாது என்று பொய் சொல்லிகொள்ளதவர்கள்.இவர்கள் பிறரிடம் ஏமாறுவதில்லை.ஏமாற்ற நினைப்பதும் இல்லை.
வசதிகள் வாய்ப்புகள் இல்லை என்ற புலம்பலிலேயே பலர் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவதும் கிடையாது.ஒரு நிலையை பூர்த்தி செய்யும் முன்னரே அடுத்த நிலைக்கு அலைபாய அலைபவர்கள்தான் பொய்முகத்தோடு வாழ்ந்து தங்களையும் பிறரையும் துன்புறுத்துபவர்கள்,அரசியல்வாதிகளும் போலி சாமியார்களும் தான்.
குறைகளை ஒப்புகொள்வதில் தயக்கம் காட்டாது ,சுய தரிசனத்தில் வெட்கம் இல்லாமலும் இருந்தால் இந்த நிலை எல்லோருக்கும் சாத்தியம்.

No comments:
Post a Comment