Saturday, August 6, 2011

EMOTIONS

உணர்ச்சிகள்
                                 
           உணர்ச்சிகள் மனித குலத்தின்நுட்பமான பண்புகளுக்கு காரணமாகும்.
மகிழ்ச்சியிலும் அழுகிறோம். துக்கத்திலும் அழுகிறோம். உலக கோப்பையை வென்றபோதும்   அழுகிறோம்.ஜப்பானில் நிலநடுக்கத்தை தொலைகாட்சி பெட்டியில் பார்த்த போதும் அழுகிறோம்.


                                                                            
                                    உணர்ச்சிகள் என்பது மகிழ்ச்சியாகவோ ,கொண்டாட்டம் ,இன்பம்  அல்லது துன்பம்,இடர் ,கவலை யாகவோ இருக்கலாம்.உணர்ச்சிகள் இல்லாத வாழ்க்கை அழகாக இருக்காது. 
                                       
     உணர்வுகள்  உள்ளார்ந்த அனுபவம்.உடல் முழுக்க பரவுவது.உடலில் எந்த குறிப்பிட்ட உறுப்புகளில் மட்டும் உணரக்கூடியது  அல்ல. பரிட்சை முடிவை எதிர் நோக்கும் போதுஇறுக்கமாக இருப்போம். முடிவு தெரிந்தவுடன் தளர்ந்து விடுவோம்.மொத்தத்தில் உறுதியான விஷயங்களை எதிர் நோக்கும்போது தளர்வாக இருப்போம். உறுதியற்ற விஷயங்களை எதிர் நோக்கும் போது மனம் அலை பாயும். 

                                                              

                         மனிதனின்  தேவைகள் பூர்த்தியாகாத போது வெறுப்பின் உச்சகட்டத்திற்கு செல்கிறான். நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறினால் உற்சாக மிகுதிக்கு செல்கிறான். 

             உணர்வுகளுக்கும் (feelings )  உணர்ச்சிகளுக்கும்(emotions ) வேறுபாடு உண்டு. உணர்வுகள் லேசானது.மெலிதான அதிர்வை உருவாக்கும்.ஆனால் நீண்ட காலம் இருக்கும்.உணர்ச்சிகள்  ஆழமானது. உடல் முழுக்க பரவுவது. ஆனால் சிறிது நேரம் மட்டுமே இருக்கும்.

  உணர்வுகள்--மன அழுத்தம் 
  உணர்ச்சிகள் --கோபம்,பயம்.

                    உணர்ச்சிகளற்ற  வாழ்க்கை  மரித்துப்போன வாழ்க்கைக்கு  சமம்


      உணர்ச்சிகள் இல்லாமல்  வாழ்க்கை இல்லை.  எல்லா உணர்ச்சிகள் கலந்ததுதான் வாழ்க்கை.ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு உணர்ச்சி.உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் நாம்      இருக்க கூடாது. நமது கட்டுப்பாடில் உணர்ச்சிகள் இருக்க வேண்டும்.   மொத்தத்தில் மிகையான உணர்ச்சிகளில் நாம்   இறுகி போக  கூடாது. சரியான நேரத்தில் சரியான உணர்ச்சிகளை  காட்டி  மென்மையாக இருக்கவேண்டும்.                                                      

No comments:

Post a Comment